🔹 சஹாபாக்களின் வாழ்க்கை வரலாறு நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நேரடி நெருக்கம் பெற்ற அஸ்ஹாப்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை வரலாறுகள், இந்த பாடநெறியின் முக்கிய உள்ளடக்கம் ஆகும்.இப்பாடநெறி மூலம், அவர்களின் இளமைப் பருவம், இஸ்லாமை ஏற்றதின் பின்னணி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வைத்த பாசம் மற்றும் இஸ்லாத்துக்காக செலுத்திய தியாகம் ஆகியவற்றை நாம் விரிவாகக் காணப் போகின்றோம். 🔹 இந்த பாடநெறி மூலம் என்ன பயனடைவீர்கள்? சஹாபாக்களின் வாழ்க்கையின் மூலம் இஸ்லாமிய முன்னோடிகளை தெரிந்து கொள்வீர்கள். அவர்களின் தியாகமும், ஈமான் உறுதியும் உங்கள் வாழ்க்கையிலும் ஈமான் உயர்வை ஏற்படுத்தும். இளம் தலைமுறைக்கு உண்மையான வழிகாட்டிகளை அறிமுகப்படுத்தும்.